சனி, 19 மார்ச், 2016

Computer Shortcut Keys | Alt Key Functions | Tamil Computer Tutorial

Computer Shortcut Keys | Alt Key Functions | Tamil Computer Tutorial
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol…
Alt + 0176 …°……degree symbol
Alt + 0177 …±….plus-or -minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fraction, three-fourths
Alt + 0215 ….×…..multiplication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..black smiley face
Alt + 15…..☼…..sun
Alt + 12……♀…..female sign
Alt + 11…..♂……male sign
Alt + 6…….♠…..spade
Alt + 5…….♣…… Club
Alt + 3…………. Heart
Alt + 4…….♦…… Diamond
Alt + 13……♪…..eighth note
Alt + 14……♫…… beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s quare root check mark
Alt + 8236…..∞….. infinity
Alt + 24…….↑….. up arrow
Alt + 25……↓…… down arrow
Alt + 26…..→…..right arrow
Alt + 27……←…..left arrow
Alt + 18…..↕……up/down arrow
Alt + 29……↔…left right arrow

பெயரில்லாத போல்டரை உருவாக்க..
நியூ போல்டர்  ஒன்றை கிரியேட் செய்து Rename கொடுத்து 
Alt  + 0160 அழுத்தி Enter  கீயை தட்டினால் பெயரில்லாமல் ஒரு போல்டர்  கிரியேட் ஆகி இருக்கும்.





என்றும் அன்புடன் . E. M. செல்வம்.

சனி, 12 மார்ச், 2016

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?

நமது சுற்றுப்புற சூழலை பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?
என் கேள்விக்கான பதில் "ஜெயா பிளஸ் தொலைகாட்சியில்" வந்தபோது...





என்றும் அன்புடன் . E. M. செல்வம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

Shortcut Keys for |Alt Used|

கணினியின் கீ போர்டு குறுக்குவழி (Key Board Short cut ) பற்றி எனக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் புரியும்படி எழுதுகிறேன்!


ஒரு போல்டர் ஒப்பன் செய்வதற்கான  குறுக்கு வழி:

வழிகள்: Alt + F + W + F



வழிகள்: மௌசை வலது கிளிக்  செய்துகொண்டு 

                  F + W கீயை அடுத்தடுத்து அழுத்துங்கள் 


வழிகள்: Windows 7 ஆக இருந்தால் 
                 Shift + Control + N ஒரே நேரத்தில் அழுத்துங்கள்!

நன்றி ! 







என்றும் அன்புடன் . E. M. செல்வம். 

சனி, 27 பிப்ரவரி, 2016

சேம்பூத்து சிவ ஆலயம்

சேம்பூத்து சிவ ஆலயம்
Semputhu Siva Temple
God Siva Temple | Tirunelveli

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சேம்பூத்து சிவ ஆலயம் மூன்று மலை நடைபயணத்து பின் தரிசனம் அகஸ்திய மகாமுனி வலிபட்ட லிங்கம்
செம்பூத்து மகா கணபதி












உயரம் அதிகம் என்பதால் முடிந்தவரை அதிகமான எடை உள்ள பைகளை
எடுத்து செல்லவேண்டாம்































சேம்பூத்து ஊற்றின் மகிமை சொல்ல முடியாதவை


இந்த ஊற்றில் முதலில் தண்ணீர் இருக்காது பக்தர்கள் பால் மற்றும் இளநீர் அல்லது தேங்காய் சமர்ப்பணம் செய்து கொண்டு பத்தி சூடன் வழிபாடு செய்து சற்று ஊற்றைவிட்டு மறைவாக வந்தால் தண்ணீர் தானாக வரும் இது அடியேனும் கண்ட உண்மை

வியாழன், 18 ஜூன், 2015

நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் திருகோயில் "ஆனி" தேர் திருவிழா

வரும்  30.06.2015 நடைபெற  இருக்கும் திருநெல்வேலி நகர்
அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் திருகோயில்
"ஆனி" தேர் திருவிழாவை காண வரும் பக்தர்களை வருக வருக என வரவேற்கிறோம. 


அதை முன்னிட்டு வரும் 22.06.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆனி தேரோட்டம் 10 நாட்கள்  திருவிழா சிறப்பாக தொடங்குகிறது!


கோவிலின் முகப்பு தோற்ற்றம் 

ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம்


ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம்

ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம்
அனைவரும் வருக!

அன்புடன்-
செல்வம்




வியாழன், 8 நவம்பர், 2012

பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு


பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம்  நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய வைக்கும் கேள்வி  . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் .

முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம்


 பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்  

              அரோரா ஒளியை பற்றி  லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர் ஆராய்ந்து வந்தார்  வளிமண்டல அடுக்கினுள் சூரிய ஒளி விழும்போது பூமியின் பகல் பகுதிகளில் புற ஊதாக்கதிர்களின் ஒளி அலை நீளங்கள் பிரகாசமாய் அரோராவாய் ஒளிரும் இதை ஆராய்ச்சி செய்ய முனைந்த டிராங்கு டைனமிக் எக்பிளோரர் எனும் செயற்கைகோளின் மூலம்  புற ஊதாக்கதிர்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்தார் அதில் பூமின் பகல் பகுதிகள் பிரகாசமாய்  ஒளிர்ந்தது ஆனால் அதில் சில கரும்புள்ளிகள் காணப்பட்டன அடுத்தடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கரும்புள்ளிகள் நகர்ந்து நகர்ந்து காணப்பட்டது . கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது நீர் மூலக்கூறுகள் என்று கண்டார் .

               பூமியின்  வளிமண்டலத்தின்  உயர் அடுக்குகளில் நீர் மூலக்கூறுகள் சாத்தியம் இல்லை  ஆனால் புகைப்படத்தில் கரும்புள்ளிகளாய்   நீர் வந்தது எப்படி என்று மேலும் மேலும் ஆராய்ந்தார் முடிவில் வால்நட்சத்திரத்தில் இருந்து சிறு சிறு பனிக்கட்டிகளாக பூமின்மேல் விழுகிறது  அதனால்தான் புகைப்படத்தில் கரும்புள்ளிகள் தோன்றின எனக்கண்டறிந்தார் . வால்நட்சத்திரம்  என்பது பாதிக்கு பாதி நீர் நிறைந்தது . பல மில்லியன் ஆண்டுகளாக இவ்வாறு வால்நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீரை பெற்றதால் பூமியில் கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தோன்றின என லூயிஸ்டிராங்கு கூறினார் ஆனால்  இக்கருத்து சரியல்ல என்று  ஒரு சில விஞ்ஞானிகள்  வாதிடுகின்றனர்  மற்றும்  சிலரோ இக்கருத்தை  தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர் எது எப்படியோ அறிவியல் என்பது மக்களுக்கு நன்மைகளை  செய்தால் நல்லதுதானே .

(இந்த தகவலை நான் வேறொரு தளத்தில் இருந்து தான் எடுத்து இருக்கிறேன். அந்த தளத்தின் முகவரி சரியாக நினைவில்லை. இருந்தாலும் அந்த தளத்தின் சொந்தக்காரருக்கு ஒரு மிகப் பெரிய நன்றி!)